தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3PM - top 10 news

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3PM
3PM

By

Published : Apr 29, 2021, 3:43 PM IST

1.மருந்துப் பொருள் இறக்குமதிக்குத் தளர்வுகள் அறிவிப்பு

கரோனா நோயின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு 17 மருந்துப் பொருள்களுக்கான இறக்குமதிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

2.சிறிதேனும் ஓய்வு கிடைக்குமா என ஏங்கித் தவிக்கும் கர்ப்பிணி காவலர்கள்!
கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால் கர்ப்பிணி காவலர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

3.மே 2 அன்று முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி, முழு ஊரடங்கை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

4.ஊரடங்கு குறித்து அரசே முடிவு செய்யும்: சத்யபிரத சாகு

மே 1, 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து அரசு முடிவுசெய்யும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிகை தொடர்பான விவரங்களை அரசுக்கு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

5.கரோனாவை வீழ்த்தி நம்பிக்கையூட்டும் முதிய தம்பதி

புனே: கரோனா தொற்று பாதித்த வயதான தம்பதி, 10 நாள்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ள சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

6.'நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி' - ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவில் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

7.மருந்துப் பொருள் இறக்குமதிக்குத் தளர்வுகள் அறிவிப்பு

கரோனா நோயின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு 17 மருந்துப் பொருள்களுக்கான இறக்குமதிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

8.'புதிதாக ஒரு லட்சம் தடுப்பூசிகள் வாங்கியுள்ளோம்' - தமிழிசை

புதுச்சேரி: புதியதாக ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகள் வாங்கியுள்ளதாகத் தெரிவித்த துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை, ஏற்கனவே இருப்பில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்தார்.

9.72 வயது மூதாட்டிக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதிய சலுகை

பெங்களூரு: 72 வயதான மூதாட்டி கர்நாடக மாநில அரசில் பல்வேறு துறைகளில் 25 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓய்வூதியம் பெறும் உரிமையை நீதிமன்றத்தை நாடி பெற்றுள்ளார்.

10.புதையல் வேட்டை தொடர்பான கதை கொற்றவை - சி.வி. குமார்

சென்னை: தயாரிப்பாளர் சி.வி. குமார் இயக்கியுள்ள 'கொற்றவை' திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details