தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - etv bharat tamil news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 PM
1 PM

By

Published : Dec 14, 2020, 1:00 PM IST

1.போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரம்: மாணவி போலி அழைப்புக் கடிதமும் கொண்டுவந்தது அம்பலம்

போலி நீட் சான்றிதழ் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

2.'கொள்கைகள் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்துவோர்களே பிரிவினைவாதிகள்'

தான் கொண்ட கொள்கைகள் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்த எண்ணுபவரே பிரிவினைவாதி என காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் மத்திய அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

3.இமாச்சலப் பிரதேச ஆளுநர் சென்ற வாகனம் விபத்து!

சிம்லா: இமாச்சலப் பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா சென்ற வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில், நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார்.

4. டெல்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம்!

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இன்று (டிச. 14) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

5.திருமால்பூர் - சென்னை கடற்கரை ரயில் சேவை தொடக்கம்!

காஞ்சிபுரம்: எட்டு மாத கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்குப் பின், இன்றுமுதல் மீண்டும் திருமால்பூர் - சென்னை கடற்கரை ரயில் சேவை தொடங்கியது.

6.சீக்கியர்களுக்கு மெயில்: விளக்கம் அளித்த ஐஆர்சிடிசி

சீக்கியர்களுக்கு ஐஆர்சிடிசி சார்பில் அனுப்பப்பட்ட மெயில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இதுபோன்ற மெயில் அனைத்து சமூக மக்களுக்கும் அனுப்பப்படும் என ஐஆர்சிடிசி விளக்கமளித்துள்ளது.

7.தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை

ஹார்லெமில் உள்ள தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவலர்கள் சுட்டுக் கொன்றனர்.

8.சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துவது மனச்சோர்வை அதிகரிக்கும்

சமூக வலைதளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

9.சிம்புவின் ஈஸ்வரன் பட முதல் பாடல் வெளியீடு!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் பாடல் இன்று (டிச. 14) வெளியாகியுள்ளது.

10. 2021இன் கடைசி பந்தயம் - அட்டகாசமாக வென்ற மேக்ஸ் வெர்ஸ்டாப்பான்

அபு தாபியில் நடைபெற்ற இந்தாண்டிற்கான கடைசி ஃபார்முலா ஒன் பந்தயத்தில் ரெட்புல் அணியைச் சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பான் வெற்றிபெற்றார்.

ABOUT THE AUTHOR

...view details