ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - top 10 news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

1PM
1PM
author img

By

Published : Dec 11, 2020, 1:02 PM IST

1.வர்த்தகம் மற்றும் தொழில் துறை கண்காட்சியைத் தொடங்கிவைக்கும் மோடி

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார்.

2.சங்கிலித் திருடனைப் பிடித்த காவலர்களுக்கு ராமநாதபுரம் எஸ்.பி. பாராட்டு!

ராமநாதபுரம்: ஒரு ஆண்டிற்கு முன்பு சங்கிலித் திருட்டில் ஈடுபட்ட திருடனைப் பிடித்த தனிப்படை காவலர்களுக்கு எஸ்.பி. கார்த்திக் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

3.பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் சுட்டுக் கொலை - இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கோட்டில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

4.மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளைக் கொண்டு கடைகள் அமைக்க விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

5.ஜான் குமார் எம்எல்ஏ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - புதுச்சேரி காங். தலைவர்

புதுச்சேரி: ஜான் குமார் எம்எல்ஏ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஏவி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

6.தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பித்தவர்கள் யாரும் சாதித்துக் காட்டவில்லை - கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்தார்.

7.எச்சரித்தும் செயல்படத் தவறிய மம்தா அரசு - மேற்கு வங்க ஆளுநர் சாடல்!

கொல்கத்தா: மேற்கு வங்க நிர்வாகத்திற்கு சட்டம் ஒழுங்குப் பிரச்னை குறித்து எச்சரிக்கைவிடுத்த போதிலும் நிர்வாகம் செயல்படத் தவறிவிட்டதாக அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

8.வைகுண்ட ஏகாதசி: ஆன்லைன் முன்பதிவைத் தொடங்கிய திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தை முன்னிட்டு இன்று காலை முதல் ஆன்லைன் சிறப்பு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

9.விஜயகாந்தால் செய்யமுடியாததை ரஜினியால் செய்ய முடியுமா? - ஒருவிரல் புரட்சி ஆன்மிக ஆட்சிக்கு வித்திடுமா?

கட்சி ஆரம்பித்து ஒரே ஆண்டில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு எட்டு விழுக்காடு வாக்குகளைப் பெற்ற விஜயகாந்த் கட்சியால் இறுதிவரை அதிமுக, திமுக இடத்தைப் பிடிக்க முடியாத நிலையில், நடிகர் ரஜினிகாந்தால் அதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

10.கன்னியாகுமரியில் மருத்துவர்கள் போராட்டம்!

கன்னியாகுமரி: ஆயுஷ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதியளிக்கும் மத்திய அரசின் ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் இன்று (டிச. 11) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details