தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...இதோ...

1 PM
1 PM

By

Published : Dec 6, 2020, 12:58 PM IST

1.அம்பேத்கரின் 64ஆவது நினைவுநாள்: முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

புதுச்சேரி: அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

2.இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுமா?

டெல்லி: ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு அவசரப் பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கக் கோரி அந்நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளது.

3.‘வேளாண் சட்டம் குறித்து பிரதமருடன் பேசி முடிவெடுப்பதாக கூறிய அமைச்சர்கள்’ - விவசாயிகள் நம்பிக்கை

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் முடிவெடுக்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

4.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கரோனா!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

5.பாஜகவின் இன்னொரு முகமே ரஜினி - தொல். திருமாவளவன்

காஞ்சிபுரம்: 'பாஜகவின் இன்னொரு முகம் ரஜினி காந்த், பாஜக சங்பரிவார்களின் அச்சுறுத்தலால்தான் கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த்' என டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

6. ‘நெல் கொள்முதல் செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை’ - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

7. 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

சென்னை: 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு அடுத்த ஏழு நாள்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கிவைத்தார்.

8.குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது 'புரெவி' புயல்

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

9.ஏமனில் சிக்கித்தவித்த 14 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

துபாய்: ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டு, 10 மாதங்களாக அவதிப்பட்டு வந்த 14 இந்திய கடற்படையினர் துபாயிலிருந்து நேற்று தாயகம் திரும்பினர்.

10.’எனது மகள் முடிவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்’ - மில்லா ஜோவோவிச்

நடிகை மில்லா ஜோவோவிச் தனது மகள் இளம் வயதிலேயே நடிப்புத் துறையைத் தேர்வுசெய்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details