தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - etv bharat news

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

1PM News
1PM News

By

Published : May 9, 2021, 1:23 PM IST

1.கரோனா பரவல்: வார் ரூமிற்கு 6 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமனம்!

கரோனா பரவலை கட்டுபடுத்துவதற்கான கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

2.தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!

நாளை முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை மட்டும் ரூ. 426 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

3.சபாநாயகராகிறாரா அப்பாவு - அரசியல் பின்னணி?

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்புக்கு அப்பாவு நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

4.`முழு ஊரடங்கு நாள்களிலும் தடுப்பூசி போடப்படும்`-அமைச்சர் மா.சுப்ரமணியன்!

சென்னை: முழு ஊரடங்கு நாள்களிலும் கரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

5.முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனி செயலாளர் உதயச்சந்திரனுக்கு கூடுதல் பொறுப்பாக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

6.’10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்க் நிறுவப்படும்’ - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ள ஓரிரு நாளில் 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்க் நிறுவப்படவுள்ளது என ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

7.அசாம் முதலமைச்சராகும் ஹிமந்தா பிஸ்வா சர்மா?

திஸ்பூர்: அசாமின் அடுத்த முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

8.'வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தாய் மொழி, தாய் நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந்திருப்பவர் தாய் என அன்னையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

9.கரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி வரி - ராகுல் கண்டனம்!

கரோனா தடுப்பு மருந்துக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

10.சில நேரங்களில் வாழ்க்கை உண்மையிலேயே நியாயமற்றது: சோனு சூட்

கரோனாவால் உயிரிழந்த பாரதி என்ற 25 வயதுடைய பெண்ணுக்கு பாலிவுட் நடிகரும் சமீபகாலங்களில் வறியோருக்கு உதவுபவருமான சோனு சூட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details