தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am - டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

11 மணி செய்தி
11 மணி செய்தி

By

Published : Aug 6, 2021, 11:09 AM IST

1. மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

சென்னை: மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடலுக்கு சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

2.உயிருக்குப் போராடும் குழந்தை - முதலமைச்சரின் உதவியை நாடும் பெற்றோர்

நீலகிரியில் ஒன்பது மாத குழந்தையின் கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிவரும் நிலையில் குழந்தையின் பெற்றோர் முதலமைச்சரிடம் மருத்துவச் சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கைவைத்துள்ளனர்.

3. 'வீட்டோட கலர் பிடிக்கல...' ஓட்டுநரை அறைந்த லக்னோ பெண் மேலும் ஒரு பஞ்சாயத்து!

கார் ஓட்டுநரை 22 முறை அடித்து வைரலான லக்னோ இளம்பெண்ணின் புதிய காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

4. ஏறுமுகம் காணும் கரோனா: மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்தாலோசிக்கவுள்ளார்.

5.போலி பத்திரம் மூலம் பல கோடி ரூபாய் சொத்துகள் அபகரிப்பு - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் போலி பத்திரம் தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

6. தடைகளைத் தகர்த்து காவலர் உடல்தகுதித் தேர்வில் திருநங்கை தேர்ச்சி

மகளிருக்கான இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதித் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான திருநங்கை தேர்ச்சிப் பெற்றார்.

7. 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

8. '15 வயதுக்கு மேலுள்ள மனைவியுடன் உறவு வைத்துக்கொள்வது வன்புணர்வு ஆகாது'

பதினைந்து வயதுக்கு மேல் உள்ள மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்புணர்வில் சேராது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

9. இந்தியாவின் முன்னாள் கோல்கீப்பர் பாபு நாராயணன் காலமானார்

இந்தியாவின் முன்னாள் கால்பந்து கோல்கீப்பர் எஸ்.எஸ். பாபு நாராயணன் நேற்றிரவு (ஆகஸ்ட் 5) காலமானார். அவருக்கு வயது 86.

10. சன்னி லியோன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகை சன்னி லியோன் நாயகியாக நடிக்கும் 'ஷிரோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details