தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 மணி செய்தி
11 மணி செய்தி

By

Published : Dec 16, 2020, 11:06 AM IST

1.பொழுதுபோக்கு, மதக் கூட்டங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்கள் வரும் 19ஆம் தேதிமுதல் நடத்த அனுமதியளித்து முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2.ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாள்: ரூ.191.85 கோடி மதிப்பீட்டில் 71 லட்ச மரக்கன்றுகள்!

சென்னை: ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ரூ.191.85 கோடி மதிப்பீட்டில் 71 லட்ச மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சி. பொன்னையன் தெரிவித்தார்.

3.மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ்: மாணவி, தந்தைக்கு 2ஆவது அழைப்பாணை!

சென்னை: நீட் தேர்வு கலந்தாய்வில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரம் தொடர்பாக மாணவி தீக்ஷா, அவரது தந்தைக்கு முதல் அழைப்பாணை அனுப்பியும் முன்னிலையாகததால் காவல் துறை தரப்பில் மீண்டும் இரண்டாவது அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

4. சேலத்தில் 5 நாள்கள் முகாமிடும் முதலமைச்சர்: முழு விவரம் உள்ளே...

சேலம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (புதன்கிழமை) காலை சேலம் வருகை தருகிறார்.

5. ஓவைசி மூலம் இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்க கோடிக்கணக்கில் செலவிடும் பாஜக - மம்தா

ஏஐஎம்ஐஎம் மூலம் இஸ்லாமிய வாக்குகளைத் தனியாகப் பிரிக்க பாஜக கோடிக்கணக்கில் செலவிடுகிறது என நேற்று (டிச. 15) மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

6.அடுத்த ஹாட்-ஸ்பாட்டாக மாறுகிறதா அண்ணா பல்கலை? பாதுகாப்பு அவசியம் மக்களே!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நேற்று (டிச. 15) கரோனா பரிசோதனை செய்ததில் ஆறு பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

7.வாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலிசெய்ய ஏப்ரல் 30ஆம் தேதிவரை அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என லதா ரஜினிகாந்தை எச்சரித்துள்ளது.

8.பகல்பத்து 2ஆம் நாள்: முத்து சாய் கொண்டையுடன் எழுந்தருளிய ஸ்ரீரங்க நம்பெருமாள்

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நம்பெருமாள், முத்து சாய் கொண்டையுடன் எழுந்தருளினார்.

9.கார் இருக்கை தயாரிக்கும் நிறுவன குடோனில் தீ விபத்து!
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் பகுதியில் புஷ்கர் இன்சுலேசன் & பேக்கிங் என்ற கார் இருக்கைகள் தயாரிக்கும் தனியார் நிறுவன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

10.நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி 8.74 விழுக்காடு சரிவு

டெல்லி: ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதி 17.76 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இறக்குமதி 33.55 விழுக்காடு சுருங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details