தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - top 10 tamilnadu news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்...

11 AM
11 AM

By

Published : Dec 2, 2020, 10:52 AM IST

1.திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: இன்று பேச்சுவார்த்தை

சென்னை: இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

2.பெருநகர ஹைதராபாத் தேர்தலில் புதிய சாதனை!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பெருநகர ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் 2020இல் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

3.விவசாயிகள் போராட்டம்: சில ரயில்களை ரத்து செய்த வடக்கு ரயில்வே!

விவசாயிகளின் போராட்டத்தால், வடக்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்தும் வழித்தடத்தை மாற்றிவிட்டும் உத்தரவிட்டுள்ளது.

4.நாட்டின் கரோனா நிலவரம்: கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் மரணம்!

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் நாட்டில் 501 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.

5.இந்திய சீரம் நிறுவனத்தில் தடுப்பூசி பரிசோதனை தொடரும் - சுகாதார அமைச்சகம்

டெல்லி: சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் கரோனா தடுப்பூசியால் உடல், மனநல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தடுப்பூசி சோதனையில் பாதகமான விளைவு குறித்த சிக்கல், சோதனையின் காலக்கெடுவை பாதிக்காது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நேற்று (டிச. 01) எனத் தெளிவுப்படுத்தியுள்ளது.

6.பாலிவுட் நடிகரும் எம்.பி.-யுமான சன்னி தியோலுக்கு கரோனா உறுதி

சிம்லா( ஹிமாச்சல் பிரதேசம்): நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த சன்னி தியோலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

7. பைக், செல்போன்களை வழிப்பறி செய்துவந்த 3 இளைஞர்கள் கைது!

மதுரை: சமயநல்லூரில் காவல் நிலையம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை வழிமறித்து, பைக், செல்போன்களை வழிப்பறி செய்துவந்த 3 இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

8.அசோக் லேலண்ட் வாகன விற்பனை உயர்வு!

சென்னை: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் 5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

9. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.

10.கிராமிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் பெண்ணின் ஆல்பம்!

மும்பை: பாடகி பிரியா தர்ஷினியின் முதல் ஆல்பம் சர்வதேச அங்கீகாரமான கிராமிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details