தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம்
நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Oct 11, 2021, 11:28 AM IST

1. BB DAY 7: லைக், டிஸ்லைக் மூலம் பற்றவைத்த பிக்பாஸ்... தொடங்கும் புதுச்சண்டை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து போராட்ட மேடையில் அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளரும், யூ-ட்யூபருமான சாட்டை துரைமுருகன் திருநெல்வேலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2. BB DAY 8 - தொடங்கியது நாமினேஷன் படலம்... முதல்நபராக டார்கெட் செய்யப்பட்டது யார்?

பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் முதல் நாமினேஷன் குறித்த புரொமோ வெளியாகியுள்ளது.

3. முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: சாட்டை துரைமுருகன் கைது

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து போராட்ட மேடையில் அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஆதரவாளரும், யூ-ட்யூபருமான சாட்டை துரைமுருகன் திருநெல்வேலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

4. நடிகர் சங்கத் தேர்தல்: பிரகாஷ்ராஜை தோற்கடித்த நடிகர் விஷ்ணு மஞ்சு

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் அணியைத் தோற்கடித்து நடிகர் விஷ்ணு மஞ்சு அணி வெற்றிபெற்றுள்ளது.

5. முதலமைச்சரைக் கொல்ல திட்டம்: இளைஞரைக் காப்பாற்றிய காவலர்கள்

தான் முதலமைச்சரைக் கொல்ல கட்டாயப்படுத்தப்படுவதாகவும், தன்னை காப்பாற்றும்படியும் ஒரு இளைஞர் காணொலி வெளியிட்ட நிலையில், அவர் அடைத்துவைக்கப்பட்டிருந்த உணவகத்திலிருந்து காவலர்கள் அவரை மீட்டனர்.

6. பூண்டி அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் பூண்டியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

7. ஏழாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக அதிகரித்துள்ளது.

8. பிக் பியின் பிறந்தநாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

9. உ.பி. உழவர் மரணம்: அமைச்சர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் உழவர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக ஒன்றிய அமைச்சரின் மகனைக் கைது செய்யக் கோரியும், அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10. கோப்பையை நோக்கி தோனி அடித்த ஷாட்: Finals'ல் சென்னை

உத்தப்பா, ருதுராஜ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தாலும், கேப்டன் தோனியின் மிரட்டலான ஃபினிசிங்காலும், டெல்லி அணியை வீழ்த்தி 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details