தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - tamil nadu news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 AM
11 AM

By

Published : Dec 5, 2020, 10:51 AM IST

1.இரும்பு பெண்மணியின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...!

சென்னை: இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.05) அனுசரிக்கப்படுகிறது.

2.தொடரும் போராட்டம்: விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை

டெல்லி: தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 10ஆவது நாளாக தொடர்ந்துவரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று (டிச.05) ஐந்தாம்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

3.ஜெயலலிதா நினைவுநாள்: ஓபிஎஸ், இபிஎஸ் ட்வீட்!

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அவரை நினைவுகூரும் வகையில் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ட்விட்டரில் கருத்திட்டுள்ளனர்.

4.சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

டெல்லி: பண்டிகை கால சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

5.விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: கருப்பு கொடி ஏந்தி களத்தில் இறங்கும் திமுக!

சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து ஒன்பதாவது நாளாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திமுக இன்று தமிழ்நாடு முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

6.நிவர் புயல் பாதிப்புகள்! - மத்திய குழு இன்று பார்வை!

நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.

7.'இது காதலா, உணர்ச்சியா? - அன்பு காதலர்களுக்காக...

காதலரோ, தம்பதியினரோ அன்பிற்கும் உணர்ச்சி சார்புக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்ந்து உண்மையான காதலை உணர்ந்துள்ளீர்களா அல்லது கடந்துசெல்கிறார்களா? நீங்கள் உண்மையாக காதலிக்கிறீர்கள் என்றால், அது இங்கு சோதனை செய்துவிட்டுச் செல்லுங்கள். முற்றிலும் இலவசம்!

8.துபாயில் இருந்து கடத்தல்! - 8.5 கிலோ தங்கம் பறிமுதல்!

திருச்சி: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 8.5 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

9.ஹைதராபாத் தேர்தல்... பாஜக அசுர வளர்ச்சி: 'பாக்யா நகர்' வாக்காளர்களுக்கு யோகி நன்றி!

லக்னோ: பெருநகர ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக 48 வார்டுகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், 'பாக்யா நகர்' வாக்காளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

10.ஜக் ஜக் ஜீயோ: இயக்குநர், நாயகனுக்கு கரோனா உறுதி!

கதாநாயகன் வருண் மற்றும் இயக்குநர் ராஜ் மேத்தா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details