தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10 am - அமைச்சர் செல்லூர் ராஜு

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 16, 2020, 10:00 AM IST

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்து; 24 பேர் உயிரிழப்பு

லக்னோ: அவுரியாவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

குழந்தை வளர்ச்சியைக் கணக்கிடும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்: அமைச்சர் தொடங்கிவைப்பு

தூத்துக்குடி: குழந்தை வளர்ச்சியைக் கணக்கிடும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.

தொழில்முனைவோர் முதலமைச்சர் பழனிசாமியை 24 மணி நேரமும் சந்தித்து பேச அனுமதி!

சென்னை: தொழில்முனைவோர் முதலமைச்சர் பழனிசாமியை 24 மணி நேரமும் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘திமுகவினர் நாடகம் ஆடுகின்றனர்’ - அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு

மதுரை: திமுகவினர் நினைத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யலாம் என்றும், ஆனால் அவ்வாறு செய்யாமல் நாடகம் ஆடுகின்றனர் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார்.

24,000 நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.200!

சென்னை: கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்குச் செலவினமாக நாளொன்றுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எண்ணப்படும் மல்லையாவின் நாள்கள்.. மத்திய புலனாய்வு அமைப்பிற்கு வெற்றி

டெல்லி: லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவது உறுதியாகியுள்ளது.

சத்தம் இல்லாமல் பாலிவுட்டில் தடம் பதித்த 'ரேடியோ பெட்டி' இயக்குநர்

'ரேடியோ பெட்டி' இயக்குநர் ஹரி விஸ்வநாத் அடுத்ததாக இந்தியில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

ஊதிய குறைப்பு இல்லை; தேவையற்ற செலவுகளை குறைக்க பார்க்கின்றோம் - பிசிசிஐ!

கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரினால், கடும் நிதிநெருக்கடியில் பிசிசிஐ சிக்கித் தவித்தாலும், வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்போவதில்லை என பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமல் (Arun Dhumal) தெரிவித்துள்ளார்.

'2026இல் நீ, 2033இல் நான்!' - டிரில்லியனர் பட்டியலில் அமேசான் சிஇஓ, முகேஷ் அம்பானி!

2026ஆம் ஆண்டு உலகின் முதல் டிரில்லியனராக அமேசான் சிஇஓ (தலைமைச் செயல் அலுவலர்) ஜெஃப் பெசோஸ் இருப்பார் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

'கண்ணீர் வரும்... எரிச்சல் உண்டாகும்..' புதிய ஐஸ்கிரீம் பிளேவர் சாப்பிடும் ஹாங்காங் வாசிகள்!

ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 'கண்ணீர்புகை' (Tear Gas) என்ற புதிய ஐஸ்கிரீம் பிளேவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details