தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv bharat TOP 10 NEWS 7 PM
etv bharat TOP 10 NEWS 7 PM

By

Published : Nov 6, 2020, 7:58 PM IST

டாஸ் வென்ற ஹைதராபாத்...பந்துவீச்சைத் தேர்வு செய்த வார்னர்!

பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்க ஊடகங்களின் செயல் ‘இந்திய ஊடங்களுக்கான பாடம்’ - சசி தரூர்

டெல்லி: பொய்களை பரப்புவதாக ட்ரம்பின் பேட்டியை நிறுத்திய அமெரிக்க செய்தி நிறுவனங்களின் செயல் இந்திய ஊடங்களுக்கான பாடம் என மக்களவை உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் பேசுபொருளான அதிமுக முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமண விழா

மதுரை: தன்னுடைய மகளின் திருமணத்திற்காக பிளாஸ்டிக் தொடங்கி தங்கம் வரை, இரு சக்கர வாகனம் தொடங்கி ட்ராக்டர் வரை இரண்டு கோடி ரூபாய்க்கு சீர் செய்துள்ளார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர்.

”வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான்” - முதலமைச்சர் தாக்கு

புதுச்சேரி : ”தமிழ்நாட்டில் நடைபெறும் வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான்” என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

'காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' - வைகோ காட்டம்

சென்னை: நெய்வேலி காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட முந்திரி வியாபாரி செல்வமுருகனின் உடலை, வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்திற்கு ட்விட்டர் மூலமே மிரட்டல்....கோபத்தின் உச்சிக்கே சென்ற டிரம்ப்!

ட்விட்டர் நிறுவனம் எல்லைமீறி செல்கிறது என்றும், தனது ஆட்சி மீண்டும் அமைந்தால் சட்டப்பிரிவு 230ஐ அந்நிறுவனத்துக்கு பரிசாக அளிக்கவுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டும் தொனியில் ட்வீட் செய்துள்ளார்.

பெரும் முதலீட்டுடன் தெலங்கானாவில் கால்பதிக்கும் அமேசான் வெப் சர்வீசஸ்!

ஹைதராபாத் : இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக Amazon Web Services (AWS) நிறுவனம் தெலங்கானா மாநிலத்தில் பெரிய அளவிலான முதலீட்டுடன் கால்பதிக்க உள்ளதாக அம்மாநிலத் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே. தாரகா ராமா ராவ் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்டம் அரசிதழில் வெளியீடு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் சீட் பிளாக்கிங் முறைகேடு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கையானது மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. சீட் பிளாக்கிங் முறைகேடு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா முன்னெச்சரிக்கை: வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்

டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details