தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top-10-news-7-am
etv-bharat-top-10-news-7-am

By

Published : May 22, 2020, 6:48 AM IST

மொத்த நாடும் மேற்கு வங்கத்திற்கு துணைநிற்கும் - பிரதமர் மோடி

டெல்லி: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு மொத்த நாடும் துணைநிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர்.

இந்திய ராணுவத்தினரை சீனா அத்துமீறி தடுத்து நிறுத்தியது - வெளியுறவுத் துறை

டெல்லி : சீனா-இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவப் படையினரை, சீனா அத்துமீறி தடுத்து நிறுத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: வட்டி விகிதத்தை அதிகரித்த ஐசிஐசிஐ வங்கி!

மும்பை: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதத்தை 0.50 விழுக்காட்டிலிருந்து 0.80 விழுக்காடு உயர்த்தி, ஆண்டுக்கு 6.55 விழுக்காடு வட்டி வழங்குவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

கூடங்குளம் 2ஆவது அணு உலை பழுது - 465 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டாவது அணு உலையில் பழுது ஏற்பட்டுள்ளதால், 465 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அரசுத்துறையில் புதிய பணியிடங்களுக்குத் தடை!

சென்னை : அரசுத்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கத் தடை விதிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

'அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது' - அரசு

சென்னை: அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

'குறும்படத்தில் குறியீடு வைத்த கௌதம் மேனன்?'

கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தில் சூர்யாவுக்காக கௌதம் தயாரித்த கதையின் குறிப்பு இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது.

உடல்நிலை காரணமாக ஓய்வை அறிவித்த ஸ்பேனிஷ் கால்பந்து வீரர்!

ஸ்பேனிஷ் கால்பந்து அணியின் முன்னணி வீரரான அரிட்ஸ் அடுரிஸ்( Aritz Aduriz), தனது உடல்நிலை காரணமாக அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

லேசான கோவிட்-19 அறிகுறி இருந்தால் குளோரோகுயின் பயன்படுத்துங்கள் - பிரேசில் அதிபர்

பிரெசிலியா : லேசான அறிகுறிகளுடன் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்குமாறு பிரேசில் அதிபர் போல்சோனாரோ அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details