தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

1 மணி செய்தி
1 மணி செய்தி

By

Published : Oct 26, 2020, 12:48 PM IST

1. மருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீகித இட ஒதுக்கீடு இந்தாண்டு கிடையாது- உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு, 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் தீர்ப்பளித்தது.

2. பிகார் தேர்தல்: பரப்புரை இன்றுடன் ஓய்கிறது!

பாட்னா: பிகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள சட்டபேரவைத் தொகுதிகளில் இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது

3. 'முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மக்களைக் காக்கும்' - பருவமழை குறித்து எச்சரித்த ராமதாஸ்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், பருவமழையால் அதிகம் பாதிக்கப்படும் சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் இன்னும் முடிவடையாதது வெள்ள பாதிப்பிற்கு வழிவகுத்து விடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

4. ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கு - முன்னாள் மத்திய அமைச்சருக்கு சிறை!

டெல்லி: ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

5. நான் பிரதமரானால் என் முதல் கையெழுத்து இதற்குதான் - தொல். திருமாவளவன்!

ராணிப்பேட்டை: நான் ஒருவேளை நாட்டின் பிரதமரானால் மனுதர்ம நூலை தடை செய்ய முதல் கையெழுத்து இடுவேன் என விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

6. 'ட்ரம்ப் 2020' என்ற முழக்கமிட்ட காவலர் சஸ்பெண்ட்

நியூயார்க்: 'ட்ரம்ப் 2020' என்ற முழக்கமிட்ட நியூயார்க் நகர காவலர் 30 நாள்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

7.சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு!
சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் திடீா் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

8.நெருங்கும் தேர்தல்: அமெரிக்க துணை அதிபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து ஐவருக்கு கரோனா!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸுடன் தொடர்பில் இருந்தவர்களில் குறைந்தபட்சம் ஐந்து பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

9. சொத்து தகராறில் சித்தப்பாவை கொலை செய்தவர் கைது!

ஈரோடு: சொத்துத் தகராறில் தனது சித்தப்பாவை கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

10. சூர்யாவின் ’சூரரைப் போற்று’ பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள, ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details