தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top-10-3pm
etv-bharat-top-10-3pm

By

Published : Jul 6, 2020, 3:00 PM IST

நவம்பர் வரை விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் வரை ரேசன் கார்டுதாரர்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே ஊரடங்கு காலத்திலும் மின்கட்டணம் கணக்கிடப்படும் - தமிழ்நாடு அரசு

ஊரடங்கு காலத்திற்கான மின்கட்டணம் முந்தைய கட்டணத்தின் அடிப்படையிலேயே வசூலிக்கப்படுவதாகவும், ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்: மத்திய அரசு பதில்

சென்னை : ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

இனி 2 ஆண்டுகளில் எம்சிஏ பட்டம் பெறலாம்!

சென்னை: மூன்று ஆண்டுகளாக இருந்த எம்சிஏ முதுகலை பட்டப்படிப்பு இனி இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது.

வெளியேற்றப்பட்ட சீன டிராகன்கள்; வெற்றிடத்தைக் கைப்பற்றுமா இந்திய புலிகள்?

டெல்லி: மத்திய அரசு 59 சீனச் செயலிகளைத் தடைசெய்ததையடுத்து இணையத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இந்திய நிறுவனங்கள் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் என்று சைபர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையமாக மாறிய கண்காட்சி மையம்!

பெங்களூரு: பெங்களூரிலுள்ள சர்வதேச கண்காட்சி மையம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

விகாஸ் துபேவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த எஸ்ஐ, 3 காவலர்கள் இடைநீக்கம்!

கான்பூர்: காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், விகாஸ் துபேவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஒரு உதவி ஆய்வாளர், மூன்று காவலர்கள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குநர் செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்த சோனியா அகர்வால்

நான் தமிழ் சினிமாவில் பார்த்த திரைப்படங்களில் ஒப்பிட முடியாத ஒரு படம் காதல் கொண்டேன் என நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த சௌதாம்டன்

மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் சௌதாம்டன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

கரோனா குறித்த டிரம்ப்பின் கருத்துக்கு எஃப்டிஏ ஆணையர் மறுப்பு

”99 சதவிகித கரோனா தொற்று பாதிப்புகள் தீங்கு விளைவிக்காதவை” என்ற டிரம்ப்பின் கருத்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீஃபன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details