தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - கரோனா பரிசோதனை

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு இதோ...

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

By

Published : Aug 26, 2020, 7:05 AM IST

மாநில முதலமைச்சர்களுடன் சோனியா இன்று அவசர ஆலோசனை!

சோனியா காந்தி

காங்கிரஸ் ஆட்சிபுரியும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும், பாஜக ஆட்சிப் புரியாத கூட்டணிக்கட்சி முதலமைச்சர்களுடனும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று (ஆக. 26) அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று முதல் +1 விடைத்தாள் நகல் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி மாணவிகள்

இன்று (ஆக. 26) பிற்பகல் 3 மணி முதல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு ரேண்டம் எண் இன்று வெளியீடு

உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்களை, இன்று (ஆக. 26) மாலை 4 மணிக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிடுகிறார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதிகரிக்கும் கரோனா: மத்திய குழுவைப் பலப்படுத்தி அரசுக்கு உதவ 3 விஞ்ஞானிகள் இன்று புதுச்சேரி வருகை

கரோனா பரிசோதனை

அதிகரிக்கும் கரோனாவால், மத்திய குழுவைப் பலப்படுத்தி அரசுக்கு உதவும் வகையில் மூன்று விஞ்ஞானிகள் அடங்கிய குழு இன்று (ஆக. 26) புதுச்சேரி வருகிறது.

இன்று நடைபெறும் அமெரிக்க குடியரசு கட்சியின் மாநாடு!

ட்ரம்ப்

அமெரிக்காவில் நவம்பரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஆக. 26) அமெரிக்க குடியரசு கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இதில் வெளியுறவுத் துறைச் செயலர் மைக் பாம்பியோ, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலினா, மகள் இவாங்கா ட்ரம்ப், மகன் எரிக் ட்ரம்ப் என ட்ரம்ப்க்கு நெருக்கமானவர்கள், இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details