- நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று மாலை உரை
கரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்துவரும் நிலையில், நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 30) மாலை நான்கு மணிக்கு உரையாற்ற இருக்கிறார். மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், பிரதமர் மோடி உரையில் அது குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிகரிக்கும் கரோனா பரவல்: தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு
தமிழ்நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவரும் நிலையில், ஜூலை 1 முதல் (நள்ளிரவு 12 மணிமுதல்) மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கானது ஜூலை 31ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
- சாத்தான்குளம் சம்பவம்: காவலர்கள் மூவருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை
சாத்தான்குளத்தில் காவல் துறையினரின் விசாரணையில் தந்தை - மகன் இருவரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு இன்று (ஜூன் 30) நேரில் முன்னிலையாகுமாறு காவல் துணை காண்காணிப்பாளர் பிரதாபன், காவல் கூடுதல் துணை காண்காணிப்பாளர் டி. குமார், காவலர் மகாராஜன் ஆகிய மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
- தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள வட கடலோர மாவட்டங்களில் இன்று (ஜூன் 30) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் - லடாக் மோதல் விவகாரம்: இருநாட்டு அலுவலர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
லடாக் மோதல் தொடர்பாக இந்தியா - சீனா இரு நாடுகளின் பாதுகாப்புப் படையினர், இன்று (ஜூன் 30) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதன்மூலம் எல்லையில் அமைதி திரும்புமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - சீனா பேச்சுவார்த்தை