திருப்பதி தரிசனம்: ஆன்லைன் டிக்கெட் வெளியீடு
திருப்பதி ஏழுமலையானை வரும் ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் இன்று (ஜூலை 20) வெளியிடப்படவுள்ளது.
தடுப்பூசி தட்டுப்பாடு
சேலத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று (ஜூலை 20) அனைத்து மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விண்ணுக்கு செல்லும் ஜெப் பெசோஸ்
அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 20) விண்ணுக்கு செல்ல இருக்கிறார். சுமார் 100கி.மீ., தூரம் வரை பயணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
விண்ணுக்கு செல்லும் ஜெப் பெசோஸ் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகள் வருகை
தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தடுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சந்தையில் அறிமுகமாகும் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன்
இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வரும் நிலையில், இன்று (ஜூலை 20) ஒப்போ ரெனோ 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.
இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டி
இந்தியா- இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை 20) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
வானிலை நிலவரம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (ஜூலை 20) கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்; நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.