தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2021, 7:15 AM IST

ETV Bharat / state

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்.

இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்

மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை 19) தொடங்கவுள்ள நிலையில் இன்று (ஜூலை 18) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

மோடி தலைமையில் கூட்டம்

மோடியை சந்திக்கும் ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க (ஜூலை 18) முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

ஸ்டாலின் - மோடி

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை 19) தொடங்கவுள்ள நிலையில் இன்று (ஜூலை 18) காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் கூட்டம்

மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்

மெட்ரோ ரயில் சேவை இன்று (ஜூலை 18) முதல் ஞாயிறுதோறும் இனி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ

இந்தியா-இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி

இந்தியா- இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை 18) மாலை 3 மணியளவில் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. .

இந்தியா - இலங்கை

வானிலை நிலவரம்

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூலை 18) ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

ABOUT THE AUTHOR

...view details