காவிரியாற்றில் நீராட அனுமதியில்லை
ஆடி மாதம் முதல் நாளான இன்று (ஜூலை 17) மேட்டூர் காவிரியாற்றில் பொதுமக்கள் நீராட அனுமதியில்லை என பொதுப்பணித் துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.
சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
ஆடி மாதம் பிறந்ததையொட்டி இன்று (ஜூலை 17) முதல் வரும் 21ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை பூங்காவுக்கு தடை
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு மேட்டூர் அணை பூங்காவிற்கு பொதுமக்கள் அதிகளவில் வரும் நிலையில் அங்கு தொற்று பரவல் அபாயம் ஏற்படும் என்பதால் இன்றும், நாளையும் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் வாடிவாசல் அப்டேட்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜூலை 17) மாலை 5:30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடக்கம்
அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று சென்னையில் தொடங்கவுள்ளன.