மேஷம்: இன்றைய தினத்தில், உங்களை நீங்களே பாராட்டிக்கொண்டு, சிறந்த வகையில் ஆடைகளை அணிந்து கொள்வீர்கள். மற்றவர்களும் உங்களை, கவனித்துப் பார்த்தால், நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றியடைந்து அனைவரையும் கவர்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், நீங்கள் மேலும் உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.
ரிஷபம்:ஒரு மேலாளராக, நீங்கள் நிறுவனத்திற்கு சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரையும் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்து செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலைகளில் சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.
மிதுனம்:உங்களது போட்டியாளர்கள், வர்த்தகத்திலும் விற்பனையிலும் உங்களை வீழ்த்த விரும்புவார்கள். அனைத்து பரிவர்த்தனைகளும் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு சாதகமாக இருப்பது போல் நடந்து கொள்பவர் மூலம் பாதிப்புகள் ஏற்படலாம். முன்னதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விஷயத்தில் ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப் படலாம்.
கடகம்:இன்று நீங்கள் மற்றவர்களுடன் பழகும்போது வெளிப்படையான போக்கை கடைப்பிடிப்பீர்கள். மற்றவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில், இந்த நிலை மாறி சிறிது கடுமையாக நடந்து கொள்ள நேரிடும். மாலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்மம்:பாராட்டுதல்களைப் பெற தயாராக இருங்கள். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த அங்கீகாரம், உங்கள் கடின உழைப்பின் மூலம் இப்போது வளாகத்தில் உங்களுக்கு கிடைத்துள்ளது. சக பணியாளர்கள் மற்றும் பணியில் மூத்தவர்களின் ஆதரவும் உதவியும் கிடைத்து, புதிய பணிகளை மேற்கொள்வீர்கள்.
கன்னி:நீங்கள், இன்று, குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி, செயல் புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக் கொள்வீர்கள். உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாக திறன்கள் மேலும் அதிகரிக்கும்.