தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TODAY HOROSCOPE: டிச.30 இன்றைய ராசிபலன் - indraiya rasipalan tamilil

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்ப்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

By

Published : Dec 30, 2022, 6:43 AM IST

Updated : Dec 30, 2022, 1:03 PM IST

மேஷம்:இன்று நாள் முழுக்க நீங்கள் செய்யவேண்டிய வேலைப் பட்டியல் நீண்டிருக்கும். திட்டமிடல், கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வேலைகள் குவிந்திருக்கும். மற்றவர்களிடமிருந்து போதிய உள்ளீடுகள் கிடைக்காததால் சோர்வும், மன உளைச்சலும் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் ஒரு முடிவுக்கு வரும் போது, அவை தெளிவாகும்.

ரிஷபம்:இன்றைய தினம் நீங்கள் செய்யும் விஷயங்களை சிறப்பாகச் செய்வீர்கள். உங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை திறமையுடன் கையாண்டு நல்ல பேர் வாங்குவீர்கள். இன்று ஒரு போட்டியில் பங்கேற்றால், மற்றவர்களை விட ஓரடி முன்னதாக செல்வீர்கள்.

மிதுனம்:மற்றவர்களின் செயல்களைப் பற்றி கவலைப்படாமல் சமுதாயத்தில் உங்கள் சொந்தக் காலில் நிற்பதில் கவனம் செலுத்துவதும், சமூகத்தில் நிலைத்து நிற்பதும் அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு லாபத்தையும், விறுவிறுப்பான வர்த்தகத்தையும் பார்ப்பார்கள்.

கடகம்:கடினமாக உழைத்து வேலை அல்லது வியாபாரத்தில் உங்களுக்கான இடத்தை தக்க வைப்பீர்கள். கூட்டாளிகளுடனான உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும். நெகிழ்வும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் நிலவும். உங்கள் அன்புக்குரியவருடன் இணைந்து இன்றைய மாலைப் பொழுதை உல்லாசமாக செலவிடுவீர்கள்.

சிம்மம்:கடினமாக உழைப்பது, கடும் உழைப்பு என்ற இரண்டிற்கும் ஒரு பரந்த வேறுபாடு உள்ளது. இன்றைய தினம் நீங்கள் கடினமாக, புத்திசாலித்தனமாக உழைப்பீர்கள். வெற்றிபெற வேண்டும் என விரும்பினால். கடின உழைப்புக்கு மாற்று இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், விரைவில் இதை நீங்கள் உணரவும் கூடும். எனவே இன்று வியர்வை சிந்துவதில் தவறேதும் இல்லை. மேலும், கடின உழைப்பு எப்போதும் வட்டியுடன் சேர்த்து பலனளிக்கும்.

கன்னி:இன்று அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள், உங்கள் மன அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் காரணிகள் எதுவும் இல்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களை முழுமையாக ஆதரிப்பதோடு, தடைகளை சமாளிக்க அர்பணிப்புடன் உழையுங்கள். ஊக்குவிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாத வேலைகூட உங்களுக்கு ஒப்படைக்கப்படலாம்.

துலாம்:எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெற வேண்டுமானால், கடந்த கால அனுபவங்களே அதற்கு முதலீடு. உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களில் ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுத்திக் கொண்டால், உங்களுடைய நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படக்கூடிய அருவருப்பான சூழல்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்து, பொதுவாகவே இந்த நாள் இயல்பானதாகவே இருக்கும். உங்களுடைய புரிதலுக்கும், அணுகுமுறைக்கும், இன்று பாராட்டும் மதிப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்:நீண்ட கால முதலீடுகளிலும் ரியல் எஸ்டேட்களிலும் முதலீடு செய்ய நல்ல நாள் இன்று. இது நீண்டகால நன்மைகளையும் லாபங்களையும் கொடுக்கும். உட்கார்ந்து, ஓய்வெடுக்கவும், வாழ்க்கையில் இதுவரை தவறவிட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க ஏற்ற நேரம் இது. திறந்த மனதுடன் உங்களை நோக்கி வரும் வாய்ப்புகள் அனைத்தையும் வரவேற்கவும்.

தனுசு:மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையின் பாதகமான விளைவுகளை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். இருப்பினும், ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டுவிட்டதால் நிலைமை மாறும் வாய்ப்புகள் தென்படுகிறது. மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கவும். நல்ல செய்தி அல்லது வேலை உயர்வுடன் சம்பள உயர்வு போன்றவற்றுடன் இந்த மாற்றம் தொடங்கும்.

மகரம்:உணர்வுபூர்வமான மற்றும் அதீத உரிமை உணர்வை வெளிப்படுத்த வேண்டாம். அவை உங்கள் கணிப்பை மேகம் போல் மறைத்து, உங்கள் வெற்றிக்கு தடையாக மாறிவிடும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இன்று, உங்கள் இயல்பான பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும்.

கும்பம்:ஏதேனும் இலக்கை அமைத்து, அதை அடைவதற்காக செயல்படவும் அல்லது ஏதாவது சவால் ஒன்றை ஏற்றுக்கொள்ளவும். அவற்றில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய கடின உழைப்பு மற்றும் சாதனைகளைப் பற்றி பிறர் பாராட்டுவார்கள். உங்கள் நண்பர்களும், குடும்பத்தைப் போன்றே பாசமாக இருப்பார்கள். மற்றொரு மும்முரமான வேலை நாளை தொடங்குவதற்கு முன்பே, அவர்களுடன் மகிழ்ச்சியாக சிறிது நேரத்தை செலவிடுங்கள்.

மீனம்:இதயத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் மிகவும் நெகிழ்வுடனும், உணர்வுபூர்வமாகவும் இருப்பீர்கள். உங்களை நன்கு அறிந்தவர்களுக்கும் இது பிடிக்கும் என்றாலும், மனதிற்குக் நெருக்கமானவர்களை சற்று கண்காணிப்பது நல்லது. ஏனெனில், அவர்களின் அன்பு உங்கள் கண்களை மறைத்து, தவறுகளை மட்டுப்படுத்தி காண்பிக்கும். அல்லது நீங்கள் அவற்றை மன்னித்து மறந்துவிடுவீர்கள்.

இதையும் படிங்க:தனுசு ராசியில் சூரியன் சஞ்சரித்தல், மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது

Last Updated : Dec 30, 2022, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details