தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக நாம் காணலாம்...

செய்திகள்
செய்திகள்

By

Published : Dec 17, 2020, 6:35 AM IST

இன்று கூடுகிறது உள் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு

நாடாளுமன்றத்தின் உள் துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு இன்று கூடுகிறது. இது குறித்து வெளியான செய்தியில், நாடாளுமன்றத்தின் உள் துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு இன்றும், நாளையும் (டிச. 17, 18) கூடுகிறது. இதில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றம் குறித்து இன்றும், கரோனா பரவல் குறித்து நாளையும் விவாதம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு

இன்றுமுதல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும் - அரசு அதிரடி

புதுச்சேரியில் இன்றுமுதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அம்மாநில உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்

வங்கதேச பிரதமருடன் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் மோடி

இந்திய - வங்கதேச பிரதமர்களிடையே டிசம்பர் 17ஆம் தேதி உச்சி மாநாடு நடைபெறவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது. இது குறித்து வெளியுறவுத் துறை வெளியிட்ட செய்தியில், இந்திய பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையே இன்று இணையவழி உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கரோனாவிற்குப் பிந்தைய காலத்தில் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடல் நடத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட்

பி.எஸ்.எல்.வி-சி 50 சி.எம்.எஸ்-01 ராக்கெட்டானது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்

முதலமைச்சர் பழனிசாமி வருகை: பொலிவுபெறும் அரியலூர் நகரம்

அரியலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டம், முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கிவைப்பு, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இன்று பங்கேற்கிறார்.

முதலமைச்சர் பழனிசாமி

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் இன்று தொடக்கம்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இன்று அடிலெய்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், களமிறங்கும் 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்நிய மண்ணில் முதன் முறையாக பகலிரவு டெஸ்டில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட்

ABOUT THE AUTHOR

...view details