இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்!
வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இது குறித்து விவாதிக்கவும், வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாமா என்பது பற்றி ஆலோசிக்கவும் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணை!
புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இன்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நிர்வாகக் குழுக் கூட்டம்!