தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - E tv bharat news today

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் சுருக்கமாக காணலாம்.

ETV Bharat News today Nov 5
ETV Bharat News today Nov 5

By

Published : Nov 5, 2020, 7:48 AM IST

அமெரிக்க தேர்தல் முடிவில் நிலவும் இழுபறி : வெள்ளை மாளிகையை அடைவாரா பைடன்?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு, இழுபறி நிலவி வருகிறது. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர் எனும் நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் 264 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னதாக தேர்தலில் தான் வெற்றிபெற்று விட்டதாகவும், தேர்தல் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடத் தயார் எனவும் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ட்ரம்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், ட்ரம்பின் கருத்து ஜனநாயக உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் செல்வதாக ட்ரம்ப் அச்சுறுத்தினால் அதை எதிர்கொள்ள தங்கள் வழக்குரைஞர்கள் அணி தயாராக உள்ளதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எப்படியும் இன்றைக்குள் அமெரிக்க அதிபர் யார் என்று தெரிந்துவிடும்.

அமெரிக்க தேர்தல் முடிவில் நிலவும் இழுபறி : வெள்ளை மாளிகையை அடைவாரா பிடன்?

இன்றைய ஐபிஎல் போட்டி :

ஐபிஎல் லீக் ஆட்டங்கள் முடிந்து இன்று (நவ.05) நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் (குவாலிஃபையர் 1) நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்றைய ஐபிஎல் போட்டி

லீக் சுற்றுகளில் மும்பை - டெல்லி அணிகள் மோதிய இரு ஆட்டங்களிலும் மும்பையே வெற்றிபெற்ற நிலையில், இன்றையப் போட்டியிலும் மும்பை வெற்றியைத் தக்கவைக்குமா என எதிர்பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் காத்துள்ளனர். இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் தோல்வியுறும் அணி, எலிமினேட்டர் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் இறுதிச்சுற்று வாய்ப்புக்காக மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் :

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிகட்ட பிரசாரம் இன்று (நவ.05) மாலை ஆறு மணியுடன் முடிவடைகிறது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்

பிகார் சட்டப்பேரவையின் 243 தொகுதிகளுக்கான தேர்தலில், 71 தொகுதிகளுக்கான முதல்கட்டத் தேர்தல் கடந்த அக்டோபர் 28ஆம் தேதியும், 94 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதியும் முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் (நவ.07)இறுதிகட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மாலை ஆறு மணியுடன் இறுதிகட்ட பிரசாரம் முடிவடைகிறது.

ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு :

தமிழ்நாட்டில் மழை தொடர்பாக இன்று மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்; சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம் :

சென்னையில் இன்று (நவ.,05), பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details