தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewstoday - இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக நாம் காணலாம்...

Etv bharat news today
ஈடிவி பாரத் இன்றைய செய்திகள்

By

Published : Nov 18, 2020, 7:21 AM IST

1.மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. நாள் ஒன்றுக்கு 500 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு.

மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்

2.கனமழை தொடர வாய்ப்பு

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரம் மழை கொட்டி தீர்த்த நிலையில், கனமழை இன்று தொடர வாயப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, நாகை உள்பட 8 மாவட்டங்களிலும், தென் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் கனமழை தொடரும் என்று தெரிவித்துள்ள நிலையில், குமரி, அரபிக் கடல் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை தொடரும்

3.மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி வழக்கு இன்று விசாரணை

உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவிலுள்ள கிருஷ்ணன் கோயில் அருகே அமைந்திருக்கும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இட்கா மசூதியை அகற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மதுரா நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி வழக்கு இன்று விசாரணை

ABOUT THE AUTHOR

...view details