தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - செய்திகள் தற்போது

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தில் சுருக்கமாக காணலாம்.

Etv bharat News today
ஈடிவி பாரத் இன்றைய செய்திகள்

By

Published : Nov 13, 2020, 7:36 AM IST

பிகார் முதலமைச்சர் இன்று தேர்வு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகி கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என்பது இன்று தேர்வு செய்யப்படவுள்ளது. அம்மாநில முதலமைச்சராக நிதீஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார்

தேசிய ஆயுர்வேத நிறுவனம் திறப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடி

அர்ஜூன் ராம்பாலிடம் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு போதைப் பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால்

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details