மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.
ஓய்வுபெறுகிறார் டிஜிபி ஜே.கே. திரிபாதி
தமிழ்நாடு காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவந்த ஜே.கே. திரிபாதி இன்றுடன் (ஜூன் 30) ஓய்வுபெறுகிறார்.
கரோனா தடுப்பூசி முகாம் ரத்து
கரோனா தடுப்பூசி முகாம் ரத்து தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, இன்று கரோனா தடுப்பூசி முகாம் ரத்துசெய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் புதிய சேவை கட்டணம்
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அல்லது அதன் கிளைகளின் ஏடிஎம்மிலிருந்து மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டண விதிமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மன் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 2 -0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்றது. ஜூலை 4ஆம் தேதி காலிறுதியில் இங்கிலாந்து அணி உக்ரைன் அணியுடன் மோதுகிறது.
தமிழில் வெளியாகும் லோகி
மார்வெல் ஸ்டூடியோஸின் புதிய இணையத் தொடரான 'லோகி' இன்றுமுதல் தமிழ், தெலுங்கு மொழிகளில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. ஜூன் 9ஆம் தேதிமுதல் லோகி இணையத்தொடர் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியானது.