தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்புகள் #EtvBharatNewsToday - modi inaugurate Eastern Dedicated Freight Corridor section

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

Etv Bharat News today - Dec 29
இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்புகள் #EtvBharatNewsToday

By

Published : Dec 29, 2020, 7:07 AM IST

பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி

நியூ பாபூர் - நியூ குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தை (இடிஎப்சி) பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.

பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் பார்கள் திறக்க அனுமதி

தமிழ்நாட்டில் இன்றுமுதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பார்களில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பார்

வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுகவின் தேர்தல் பரப்புரையை இன்று நாமக்கல்லிலிருந்து தொடங்குகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தஞ்சையில் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை

தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் இன்று தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார்.

கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details