தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1மணி செய்திச் சுருக்கம் இதோ...

1 மணி செய்தி
1 மணி செய்தி

By

Published : Oct 23, 2020, 12:56 PM IST

1.இந்தியாவை வம்புக்கு இழுத்த ட்ரம்ப் - அனல் பறந்த இறுதிக்கட்ட விவாதம்

வாஷிங்டன்: இந்தியாவில் காற்றின் மாசு மோசமாக உள்ளது என ட்ரம்ப் பொது விவாதத்தில் தெரிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை அழைக்கும் வேலைவாய்ப்புத் துறை

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்புத் துறை தெரிவித்துள்ளது.


3.ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரவாதியா? நடந்தது என்ன...

டெல்லி: டெல்லியிலிருந்து கோவா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரவாதி இருந்ததாக பயணி ஒருவர் தெரிவித்ததால், சக பயணிகள் அச்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4.தேவர் தங்கக் கவசத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த ஓபிஎஸ்!

மதுரை:தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தங்கக் கவசத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

5.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வடகிழக்கு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

டெல்லி: மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், வடகிழக்கு மாநிலங்களான ஒடிசா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைப் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

6. ஜேடியு-பாஜக கூட்டணி 15 ஆண்டுகளாக செய்தது என்ன? மோடியிடம் தேஜஸ்வி யாதவ்

பிரதமர் நரேந்திர மோடி பிகார் மாநிலத்தில் மூன்று பேரணிகளில் பங்கேற்கும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணி மாநிலத்தில் நிலவும் வேலையின்மை பிரச்னைக்கு இதுவரை என்ன தீர்வு கண்டுள்ளது என்று ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

7. ஆயுத பூஜை : ஆயிரத்தை தொட்ட குண்டுமல்லி விலை

தருமபுரி: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தருமபுரி பூக்கள் சந்தையில் பூக்களின் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது. மேலும் குண்டுமல்லி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

8. 11 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது!

சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்ததாகக்கூறி இந்தியாவைச் சேர்ந்த 11 மாணவர்கள் உள்பட 15 மாணவர்களை அமெரிக்க அரசு கைது செய்துள்ளது.

9. எம்பிபிஎஸ் படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27ஆம் தேதி முதல் கலந்தாய்வு!

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்வதற்கு வரும் 27 ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

10.ஆளுநரின் கால அவகாச கோரிக்கையில் நியாயமில்லை- டிடிவி தினகரன்

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால அவகாசம் கோருவதில் எவ்வித நியாயமும் இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details