தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 AM
11 AM

By

Published : Dec 11, 2020, 11:03 AM IST

1.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவா?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் நிவாரண உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும்போது உடல் அயர்ச்சி காரணமாக மருத்துவமனை சென்ற அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மீண்டும் தனது பணியைத் தொடரவுள்ளார்.

2. அரசு மருத்துவர் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை: மனைவி பிரிந்துசென்றதால் தவறான முடிவு!

சென்னை: ராயப்பேட்டையில் பணிபுரியும் அரசு மருத்துவமனை மருத்துவர், மனைவி பிரிந்துசென்ற வேதனை தாங்காமல் வீட்டில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

3.‘கூட்டம் சேராத ஆதங்கத்தில் நாடகமாடும் பாஜக’ - மம்தா தாக்கு

கொல்கத்தா: பாஜக கூட்டத்திற்கு கூட்டம் சேராத ஆதங்கத்தில் அக்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

4. ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் மரணம்: காரணம் என்ன?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கோட்டாவில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

5.கார் மோதிய விபத்தில், சாலை ஓரத்தில் நின்றிருந்த சிறுமி உயிரிழப்பு!

தஞ்சாவூர்: திருவையாறிலிருந்து தஞ்சை நோக்கிச் சென்ற கார் ஒன்று, சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த சிறுமி மீது மோதியது. இதில், அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

6. ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் மரணம்: காரணம் என்ன?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் கோட்டாவில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

7.'விவசாயி என்னும் நான்' - எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம் எடுபடுமா?

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்துவருகின்றது. அந்த வகையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரான 'விவசாயி' எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் யுக்தி, திட்டம் சாத்தியப்படுமா என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

8. மகாகவியை சிறப்பித்தது திமுக - ஸ்டாலின்

மகாகவி பாரதியின் இல்லத்தை அரசு இல்லமாக்கி, சென்னையில் அவருக்குச் சிலை வைத்து சிறப்பித்தது திமுக அரசு என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

9. ‘மம்தா ஆசிர்வாதத்துடன் அரங்கேறும் அராஜகம்’ - ஜெ.பி. நட்டா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் ஆசீர்வாதத்துடன்தான் அராஜகம் அரங்கேறுகிறது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சாடியுள்ளார்.

10.தாய், கணவனின் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட முல்லை சித்ரா

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவன், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கியக் காரணம் எனக் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details