மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு உரிய தகவல் கையேட்டில் மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலக முகவரி தவறுதலாக இடம்பெற்றுள்ளது என நமது ஈடிவி பாரத் டிசம்பர் 26ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், "தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வில் (நீட் தேர்வு) மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு அறிந்துகொள்வதற்கு அந்தந்த மாநில மருத்துவக் கல்வி இயக்கநரகங்களின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு...இயக்குநர், பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, சுகாதார சேவை இயக்குநரகம், 359, தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியும் தொடர்பு எண்களும் அளிக்கப்பட்டிருந்தன. அதனை மாற்றாமல் இந்த ஆண்டும் அதே தவறினை செய்துள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின்பொழுது பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. அது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையைத் தொடர்புகொண்டது.
ஆனாலும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் மாற்றம் செய்யாமல் உள்ளதால் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்துவருகின்றனர்" எனக் கூறப்பட்டிருந்தது.