தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - etv bharat 7 pm news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top 10 pm news
etv bharat top 10 pm news

By

Published : Oct 18, 2020, 7:17 PM IST

தமிழ்நாட்டில் 3, 914 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று(அக்.18) 3, 914 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,87,400ஆக உயர்ந்துள்ளது

ஷேக் ரஸ்ஸல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இளவேனில்!

ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஷேக் ரஸ்ஸல் சர்வதேச ஏர் ரைபிள் சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

மாமன்னர் அசோகர் ஒரு சித்தாந்தம் - டி.எம்.கிருஷ்ணா

எல்லா மதமும் சமம், நீதி மற்றும் நிர்வாகத் திறன் என அனைத்தும் அசோகரின் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை மக்களுக்கு எடுத்துச் செல்லவே 'அசோகர் கட்டளைகள்' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளோம் என்று கர்நாடக இசை அறிஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மாபெரும் வெற்றிபெற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா - வாழ்த்து தெரிவித்த மோடி

டெல்லி: பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“40 வருஷமா இருக்கோம், எதுவும் மாறலை” - கழிவு நீரால் பாதிக்கப்படும் சாலையோர மக்கள்!

திண்டுக்கல்: மழை வந்தால் வாழ்வு வளம் பெறும், குளம் குட்டை நிரம்பும், மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், ஆனால், மழை எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பதில்லை. சிறிய மழை வந்தாலே இவர்கள் வீடுகளில் பெருகும் தண்ணீரை வெளியேற்ற பாத்திரங்கள் தேட வேண்டும் என்கின்றனர் சின்னையாபுரம் மக்கள்.

அதிமுகவிற்கு 49 வயது - வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவிற்கு எப்படி அமையும்?

2019 நாடாளுமன்றத் தேர்தலைவிட வாக்கு விழுக்காடு அதிகமாக அதிமுக வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது என்னுடைய கணிப்பு என அரசியல் விமர்சகர் பேராசிரியர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

'எத்தனை கருணாநிதி வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது' - எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூர்: எத்தனை கருணாநிதி, ஸ்டாலின் வந்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

'வருமானம் 400, பைனான்ஸ் தொகை 300'- திணறும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள்!

கரூர்: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வந்தாலும் பயணிகள் குறைவால் போதிய வருமானம் இன்றி தவணையை கட்ட முடியாமல் ஆட்டோ ஓட்டுநர்கள் திணறிவருகின்றனர்.

குரங்குக்கு வீசிய கல் கரடி மீது விழுந்தது; விவசாயியை துரத்தி துரத்தி கடித்த கரடி !

சேலம்: கருமந்துறை பகுதியில் விவசாயியை கரடி கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீரப்பனின் சமாதியில் அவரது மனைவி, ஆதரவாளர்கள் அஞ்சலி!

வீரப்பனின் நினைவு நாளான இன்று அவரது சமாதியில், வீரப்பனின் மனைவி, மகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்

ABOUT THE AUTHOR

...view details