தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news

By

Published : Sep 4, 2020, 7:11 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 5,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று (செப்.4) மேலும் 5,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம்- ஆளுநர் ஒப்புதல்

கரோனா குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

திமுக எம்பிக்கள் மக்களின் குரலாக ஒலிப்பார்கள் - ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு வழக்கு: கோவில்பட்டியில் சிபிஐ விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

கண்டம் இருப்பதாகக்கூறி பெண்ணை ஏமாற்றிய ஜோசியர் கைது!

சென்னை: கணவருக்கு வாகனத்தில் கண்டம் இருப்பதாகக் கூறி அதைச் சரிசெய்ய மனைவிடம் ரூ. 5 ஆயிரம் ஏமாற்றி வாங்கிச்சென்ற ஜோசியரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்ட அதிமுக நிகழ்வில் காற்றில் பறந்த கரோனா விதிமுறைகள் !

தேனி : அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

காணாமல் போனவைகளின் பட்டியலை வெளியிட்ட ராகுல் காந்தி

டெல்லி: குடிமக்களின் வருமானம், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை காணாமல் போயிருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மற்றவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட கண் தானம் செய்யுங்கள்...!

மற்றவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட உங்களின் கண்களை கண் தான இரு வாரத்தில் தானம் செய்யுங்கள்...

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நுங்கம்பாக்கம்'

சென்னை: பிரபல ஓடிடி தளத்தில் 'நுங்கம்பாக்கம்' திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மூன்று மொழிகளில் வெளியாகும் யோகிபாபுவின் தர்மபிரபு படம்!

சென்னை : யோகிபாபு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'தர்மபிரபு' திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details