தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10 am - ஆம்பன் புயல்

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம்

etv-bharat-10-am-top-10
etv-bharat-10-am-top-10

By

Published : May 18, 2020, 10:12 AM IST

ஒரேநாளில் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய 2.39 லட்சம் பேர்

டெல்லி: 167 சிறப்பு ரயில்கள் மூலம் சனிக்கிழமை மட்டும் 2.39 லட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

'குறைவான கரோனா பரிசோதனை விபரீதத்தை ஏற்படுத்தும்'

சென்னை: கரோனா பெருந்தொற்று குறைந்துவருவதாக வெளி உலகத்திற்குக் காட்ட பரிசோதனையைக் குறைப்பது விபரீதத்தை விளைவிக்கும் எனத் திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கைவிடுத்தார்.

'பரீட்சை என்பதே மன உளைச்சல்தான்' - நடிகர் விவேக்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பரீட்சை என்பதே மன உளைச்சல்தான் எனப் பதிவிட்டுள்ளார்.

தயார் நிலையில் கோவை பேருந்து நிலையங்கள்

நேற்றுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில், இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் குறைந்தளவிலான பேருந்துகளை இயக்குவதற்காகப் பேருந்து நிலையங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாம்பனில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு; சீற்றம் தீவிரமடையும் என எச்சரிக்கை

ராமேஸ்வரம்: ஆம்பன் புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலின் சீற்றம் தீவிரமாக இருக்கும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கை மீறிய இளைஞர்; தட்டிக்கேட்ட வனக்காப்பாளருக்கு கத்திக்குத்து

கோயம்புத்தூர்: வனத் துறை சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளரைக் கத்தியால் குத்திய இளைஞரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கடந்தாண்டு வெற்றிப் படத்தை நினைவுகூர்ந்த அஜய் தேவ்கன்

தன் ’தே தே பியார் தே’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து, படம் குறித்த நினைவுகளை நடிகர் அஜய் தேவ்கன் பகிர்ந்துள்ளார்.

'கால்பந்தாட்டத்தின் அரசன் ரொனால்டோ' - ரோஹித் சர்மா!

ரொனால்டோவை கால்பந்தாட்டத்தின் அரசன் எனக் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் ஒரேவாரத்தில் அடையாளம் காணப்பட்ட 700 'சூப்பர் ஸ்பிரெடர்ஸ்'

அகமதாபாத்: காய்கறி விற்பவர், பால்காரர், மளிகைக் கடைக்காரர் உள்பட 12,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 700 பேர் சூப்பர் ஸ்பிரெடர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

'பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது'

பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 விழுக்காடாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் இது நவீனமயமாக்கல் திட்டங்களைச் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை உறுதிசெய்யும் எனவும் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details