உளவுத்துறை ஐ.ஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம் - புதிய உளவுத்துறை ஐ.ஜி.
17:27 May 30
தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜியாக ஈஸ்வரமூர்த்தியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உளவுத்துறையில் நீண்ட காலமாக காவல்துறை தலைவராக பதவி வகித்து வந்த ஐ.ஜி. சத்தியமூர்த்தி இன்றுடன் ஓய்வு பெற்றார். அதனால் அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வரமூர்த்தியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஈஸ்வரமூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்துவரும் நிலையில் உளவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:ரூ.2000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்களை விற்க தமிழ்நாடு அரசு முடிவு!