கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த ஐந்து குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கே.எஸ். பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுள் மிக முக்கியமான அமைப்பான ஊரகப் பகுதி மக்களுடன் நேரடித் தொடர்பிலுள்ள கிராம ஊராட்சி நிர்வாகம் அதிக அளவிலான பணிகளைக் கொண்டுள்ளது. அப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும், கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம ஊராட்சி அளவில் கீழ்காணும் 5 குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்து அரசாணையில் தமிழ்நாடு அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
கிராம ஊராட்சி குழுக்கள், நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழு ஆகியவற்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.