இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை கூடுதல் செயலாளர் தயானந்த் கட்டாரியா, "கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் இன்று வரை 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 97.54 விழுக்காட்டினருக்கு இலவச அரிசி, பருப்பு, சக்கரை, எண்ணெய், ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 50 ஆயிரம் நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 746 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 17,620 விவசாயிகளிடம் இருந்து, 1,72,962 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.