கடந்த சில நாள்களாக மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக பருப்பு, எண்ணெயின் விலை உயர்வை சந்தித்துவருகிறது. சென்னையின் சில்லறை விற்பனை சந்தையில், ஒரு கிலோ (ரூபாயில்)
- துவரம் பருப்பு - 95,
- உளுத்தம் பருப்பு - 130,
- பாசிப்பருப்பு - 95 முதல் 102 வரை,
- கடலைப் பருப்பு 60 முதல் 65 வரை
என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. பருப்பு வகைகளின் விலை கடந்த ஒரு மாதத்தில் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர். புளி கிலோ 150 ரூபாயாக உள்ளது. சிகப்பு மிளகாயின் விலை 140 ரூபாய் முதல் 175 ரூபாய் வரை உள்ளது.
எகிப்து வெங்காயம் சந்தைக்கு வந்த பிறகு வெங்காயத்தின் விலை சற்று குறைந்தாலும், தற்போது வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்துவருகிறது. இன்றைய நிலவரப்படி கோயம்படு காயற்கறி சந்தையில், வெங்காயத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 80 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பூண்டு கிலோவுக்கு 150 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், தக்காளி, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்களின் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.320 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது ரூ.180- ரூ.250 விற்பனை செய்யப்படுகிறது.