தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு சாலை விபத்தில் 4 பேர் பலி: முதலமைச்சர் நிவாரணம் நிதி அறிவிப்பு! - நிவாரணம் நிதி முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஈரோடு சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Erode road accident: CM announces relief fund
Erode road accident: CM announces relief fund

By

Published : Sep 4, 2020, 4:16 PM IST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் இலக்காபுரம் கிராமம் புதுவலசு என்னுமிடத்தில் நேற்று (செப். 3) சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்துகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் மோதிய விபத்துக்குள்ளாகின.

இதில், குளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மோகம்புரி, அவருடைய மனைவி பொங்கி அம்மாள், சின்னுசாமி என்பவரின் மகன் பாலசுப்பிரமணி, பொன்னுசாமி என்பவரின் மனைவி பார்த்தாள் ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த விபத்து அறிந்து வேதனை அடைந்ததாக இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

மேற்கண்ட சாலை விபத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டிற்கு வந்த கோவிட்ஷீல்டு தடுப்பூசி

ABOUT THE AUTHOR

...view details