ஈரோடு: ஈரோட்டில் பிரதான சாலைக்கு "தியாகி குமரன் சாலை" எனப் பெயர் சூட்டல் நிகழ்வை இன்று (அக்.04) சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்துவைத்தார்.
தியாகி குமரனின் சிறப்பு:
தன் இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காக தேசிய கொடியை கைகளில் தாங்கி பிடித்தப்படியே தன் உயிரை நீத்த திருப்பூர் குமரன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி பிறந்தார்.
தியாகி குமரனின் 118ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு, தியாகி குமரன் சாலை எனப் பெயர் சூட்டி நேற்று(அக்.3) அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், குமரனின் 118ஆவது பிறந்த நாளான இன்று (அக்.4) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு, தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக பெயர் பலகையை திறந்துவைத்தார்.