சென்னை:ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகளாக எண்ணுவதற்கு திட்டமிடப்பட்டு விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. 5ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39 ஆயிரத்து 792 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13 ஆயிரத்து 609 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 26 ஆயிரத்து 183 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.