தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்று அசத்திய 'பேஷன் ஷோ' - Disabled

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்ற சமத்துவ 'பேஷன் ஷோ' (Fashion Show) நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்று அசத்திய சமத்துவ 'பேஷன் ஷோ’
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்று அசத்திய சமத்துவ 'பேஷன் ஷோ’

By

Published : Nov 18, 2022, 5:22 PM IST

சென்னை: விமான நிலையத்தில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்கள் விமான நிலைய அலுவலர்கள் இணைந்து சமத்துவ பேஷன் ஷோவில், சமத்துவ ரேம்ப் வாக் (Ramp walk) நடந்தது.

சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பார்வையற்றவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்சரா ரெட்டி, 'ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் சமூக நீதி பற்றி பேசுகின்றன. சமூக நீதி என்றால் என்ன என்பதை இந்த ரவுண்ட் டேபிள் முலம் நடத்திக்காட்டியுள்ளனர். கல்வி, வேலை வாய்ப்புகள், உணவுக்காக கஷ்டப்படுபவர்கள் போன்றோர் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர, நிச்சயமாக அனைவரும் உதவி செய்தால் அனைத்து சமூகமும் சமமாக வளரும்.

திருநங்கைகள் கஷ்டப்படுகின்றனர். திருநங்கைகள் ஏன் பாலியல் தொழில் செய்கிறார்கள் எனக் கேட்கின்றனர். வீட்டில் எந்த சலுகைகளும் கிடைக்காததால் பசியால் திருநங்கைகள் அதனை செய்கின்றனர். திருநங்கைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நல்லது செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பங்கேற்று அசத்திய சமத்துவ 'பேஷன் ஷோ’

திருநங்கைகள் வீட்டில் இருந்து விரட்டப்படும்போது வேலை கிடைக்காது. முழு திருநங்கையாக மாற மருத்துவ சிகிச்சைக்குப் பணம் இருக்காது. அனைத்து சமூகமும் சமமாக வளர்ந்தால் இது போன்ற பிரச்னைகள் வராது. சமூக நலத்துறை முலம் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியை அரசு ஒதுக்க வேண்டும்'எனக் கூறினார்.

இதையும் படிங்க:10 சதவீத இட ஒதுக்கீடு முறையானது அல்ல.. துரை வைகோ

ABOUT THE AUTHOR

...view details