தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சம வேலைக்கு சம ஊதியம்.." இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேறுமா? தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு! - இடைநிலை ஆசிரியர் சங்கம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் தொடக்கக் கல்வி இயக்குநருடன் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

intermediate-teachers tn-government-invites
இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 8:09 AM IST

சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி 2009ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்து 13 ஆண்டுகளாக போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி முதல் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இது குறித்து ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது 2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. ’ஒரே பணி ஒரே கல்வி தகுதி’ என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதை களையக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துடன் திமுக தேர்தல் அறிக்கை எண்-311ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு ’சம வேலைக்கு’ 'சம ஊதியம்’ வழங்கப்படும் என இடம் பெற செய்தார். ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழக முதலமைச்சர் 2023 புத்தாண்டில் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார். மேலும் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணிநியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியம் போதுமானதாக இல்லமல் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம். இதையடுத்து ஊதிய முரண்பாடை விரைந்து களைய கோரி மூன்று போராட்டங்களை நடத்திட தீர்மானித்தோம். முதல் கட்டமாக ஆகஸ்ட் 13 கோரிக்கை ஆயத்த மாநாடு சுமார் 6,500 ஆசிரியர்களுக்கு மேல் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்டமாக செப்- 5 முதல் 27 வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்று வருகிறோம். தொடர்ந்து நடத்திய 2 கட்ட போரடங்களுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பதால், வரும் செப்28 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று (செப். 25) காலையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் தொடக்கக் கல்வி இயக்குநருடன் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:வந்தே பாரத் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுமா? - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதில்!

ABOUT THE AUTHOR

...view details