தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்": ஈபிஎஸ் ட்வீட் - Jayalalitha 75th birthday

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இபிஎஸ் ட்விட்
இபிஎஸ் ட்விட்

By

Published : Feb 24, 2023, 3:13 PM IST

சென்னை: கடந்த ஆண்டு, ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும்;
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை அதிமுக தொண்டர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலை மற்றும் எம்ஜிஆர் உருவச்சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து 75 கிலோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதன் பிறகு அன்னதானத்தை தொடங்கி வைத்தார், எடப்பாடி பழனிசாமி. பின்னர், மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக பசுமை வழிச்சாலை உள்ள அவரது வீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள பதிவில், ""இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என சூளுரைத்து, துரோகிகளையும், எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்து, கல்லும் கனியாகும் கருணையால் மக்களுக்காக அள்ளி அள்ளி நலத்திட்டங்களை கொடுத்து எல்லோர்க்கும் அன்னையென தொண்டாற்றி, மகத்தான சாதனைகள் பல புரிந்த மக்கள் தலைவி, சரித்திர வெற்றிகளும் மாறாப் பெரும் புகழும் கொண்ட ஜெயலலிதாவின் பவள விழா பிறந்தநாளில், நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற உறுதியேற்று அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டோனி, ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட்டால் இந்தியாவுக்கு நடந்த கொடுமை! ரசிகர்கள் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details