சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிட என்றும் அயராது உழைப்பேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நூறாண்டு காலம் அதிமுகவை வெற்றி இயக்கமாக உருவாக்கிட உழைப்பேன் - முதலமைச்சர்! - முதலமைச்சர்
![நூறாண்டு காலம் அதிமுகவை வெற்றி இயக்கமாக உருவாக்கிட உழைப்பேன் - முதலமைச்சர்! eps tweet after announcing him as a cm candidate](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9085175-539-9085175-1602069526711.jpg)
16:25 October 07
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு, எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.
வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.