தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுக்குழுவை கூட்டாமலேயே வேட்பாளரை தேர்வு செய்ய ஈபிஎஸ் தரப்பு திட்டம்?! - OPS EPS candidate on behalf of AIADMK

அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் பொதுக்குழுவை கூட்டாமலேயே வேட்பாளரை தேர்வு செய்ய ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'பொதுக்குழுவை கூட்டாமலேயே... வேட்பாளரை தேர்வு..' ஈபிஎஸ் தரப்பு திட்டம்
'பொதுக்குழுவை கூட்டாமலேயே... வேட்பாளரை தேர்வு..' ஈபிஎஸ் தரப்பு திட்டம்

By

Published : Feb 3, 2023, 8:48 PM IST

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரண்டு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணையில் இடைத்தேர்தல் வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் பிப்.6ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் யார் என முடிவு செய்ய பொதுக்குழுவை கூட்டாமல் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற ஈபிஎஸ் தரப்பு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த கால அவகாசமே இருப்பதால் வரும் 6ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் யார் என்று தெரிவிக்க ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் பணிகளை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, ஈபிஎஸ் தரப்பின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் விசாரிக்கும் போது, "கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதால் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் பெறத் திட்டமிட்டுள்ளோம். மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்களிடம் இதற்கான படிவத்தை கொடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் வாங்க இருக்கிறோம். இதற்கான வேலைகளை தற்போதே தொடங்கியுள்ளோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:தருமபுரியில் விளைநிலங்களில் ரவுசுகாட்டும் ஒற்றை காட்டுயானை - களமிறங்கிய 'கும்கி' சின்னத்தம்பி!

ABOUT THE AUTHOR

...view details