சென்னை: ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 51வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுகவின் 51வது ஆண்டு விழா தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது" என கூறினார்.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்க வேண்டுமென மூன்று முறை இபிஎஸ் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் இறுதியாக ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அங்கீகரித்தார். இதனால் சட்டப்பேரவையை இபிஎஸ் தரப்பு புறக்கணித்ததாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து இபிஎஸ் பதில் கூற மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க:சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் கான்சப்டே இல்லை... நடந்தது என்ன..?