நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்லவம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேர்ந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
'தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று' - ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே.பழனிசாமி
சென்னை: தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
EPS - OPS -thanks for TN People
அதில் ‘ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரமாகும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி; மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் சிறப்புடன் பணியாற்ற தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெற்றிக்காகப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளனர்.