முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்பகுதியில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்க ரூ. 50 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்தது. இந்தப் பணிக்காக கடந்த 2018ஆம் ஆண்டு, மே 8ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்டு அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 50ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் நடைபெற்று வந்த கட்டுமான பணி, 10 பகுதி வேலைகளில் 8 பகுதி வேலைகள் ஓரளவு முடிந்துள்ளன.